
சீரியல் ஜோடிகளில் பலர், ரியல் ஜோடிகளாக மாறியுள்ளார். அந்த வரிசையில், சஞ்சீவ் -ஆல்யா மானசா ஜோடி காதல் திருமணத்தில் இணைந்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். இந்த ஜோடிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளன.
சஞ்சீவ் -ஆல்யா மானசா ஜோடி “ராஜா ராணி 1” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் அடைந்த இவர்கள் இடையே காதலி மலர்ந்து, பின்னர் கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு, ஏற்கனவே ஐலா என்ற மகள் இருக்கிறார். இதனிடையே இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார் ஆல்யா மானசா.
ஆல்யா மானசா - சஞ்சீவ் சீரியல்:
ராஜா ராணி 2 சீரியல் சித்துவிற்கு ஜோடியாக, முக்கிய கதாபத்திரத்தில் நடிகையாக வலம் வந்தவர் ஆல்யா மானசா.இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோதும், நடித்து வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முன்பு வரை நடித்துள்ளார். இதையடுத்து, அண்மையில் அவர் தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ரியா என்பவர் சந்தியா வேடத்தில் நடிக்கிறார்.
ஆல்யாவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை:
தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு மகன் பிறந்துள்ளார். மருத்துவர்களிடம் இருந்து குழந்தையை சஞ்சீவ் பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது. அதோடு தனது மகனுக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளதாகவும் அவரே கூறியிருந்தார்.
சஞ்சீவிற்கு கிடைத்த மிக பெரிய கௌரவம்:
சஞ்சீவ் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும், TRP ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். மகன் பிறந்த குஷியில் இருக்கும் சஞ்சீவிற்கு தற்போது மிக பெரிய கௌரவம் கிடைத்துள்ளது.
ஆம், அண்மையில் சன் டிவியில் சின்னத்திரை கலைஞர்களுக்காக சன் குடும்பம் விருதுகள் நடைபெற்றது. இதில் சஞ்சீவிற்கு கயல் சீரியலின் நட்சத்திர நாயகன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆல்யா மானசா படு குஷியில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.