Beast Trailer: பீஸ்ட் படத்தின் ட்ரைலர், இன்று மாலை 6 மணிக்கு (2ம் தேதி) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த சூழலில், இணையத்தில் உலா வரும் வீடியோ ஒன்று விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பீஸ்ட் படத்தின் ட்ரைலர், இன்று மாலை 6 மணிக்கு (2ம் தேதி) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த சூழலில், இணையத்தில் உலா வரும் வீடியோ ஒன்று விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என இரண்டு படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.
நட்சத்திர பட்டாளங்கள்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக பீஸ்ட் திரைப்படம் தயாராகி உள்ளது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தில் ஷான் டாம் சாக்கோ வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய்யின் 65-வது படம்:
நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் படத்தின் ஹிட் பாடல்கள்:
ஏற்கனவே, பீஸ்ட் படத்தில் இருந்து வெளியாகியுள்ள பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ளது. இந்த படத்திலுருந்து முதல் பாடலாக வெளியான அரபிக் குத்து 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படித்தது. இதையடுத்து கடந்த 19-ம் தேதி விஜய் ,நெல்சன், அனிரூத் மூவரும் இடம்பெற்றிருக்கும், ஜாலியோ ஜிம்கானா என்னும் பாடல் வெளியானது. ஆனால், இந்த பாடல் அரபிக் குத்து பாடல் போன்று ஹிட் அடிக்கவில்லை.
இன்று முதல் டிரைலர்:
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, பீஸ்ட் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படக்குழு நேற்று மாஸ் ஆக்ஷன் போஸ்டருடன் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
லீக்கானதா பீஸ்ட் படத்தின் ட்ரைலர்..?
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் லீக்கானது போல் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இந்த வீடியோவினால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், அந்த வீடியோ பீஸ்ட் வீடியோ ஒன்றும் இல்லை. அது பைரவா மற்றும் குர்கா பட காட்சிகளை வைத்து எடிட் செய்துள்ளனர். யாரும் அதை பார்த்து ஷாக் ஆக வேண்டும் என்று ஒரு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.