
யாஷிகா ஆனந்த் தான் விரைவில், திருமணம் செய்யப்போவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
கவர்ச்சி நாயகியின் ஆரம்ப கால பயணம்:
இளம் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி பிரபலமானார். இதையடுத்து, ஏராளமான பட வாய்ப்புகள் தேடி வர, ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் தமிழ் ரசிகர்களின் மனதில், பாப்புலர் நாயகியாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் நடித்துள்ளார்.
யாஷிகா ஆனந்த் கார் விபத்து:
யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கினார். கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் தோழியுடன் பார்ட்டியை கொண்டாடி விட்டு புதுச்சேரியில் இருந்து திரும்பும் போது யாஷிகாவுக்கு திடீர் என விபத்து ஏற்பட்டது. தற்போது முழுவதுமாக உடல்நிலை தேறியுள்ள யாஷிகா மீண்டும் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதையடுத்து, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.
யாஷிகா ஆனந்த் திருமணம்:
தற்போது யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் தனக்கு திருமணம் என சொல்லி ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் அவர் "என் அம்மாவும், அப்பாவும் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கி விட்டனர். இது செட்டில் ஆகும் நேரம், திருமணம் செய்தாலும் சினிமாவில் இருந்து விலகமாட்டேன். இது நிச்சியக்கப்பட்ட திருமணம் தான், லவ்லாம் செட் ஆகாது" உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும் என கூறி இருக்கிறார். இருப்பினும், இது யாஷிகா குறும்புத்தனமாக பதிவிட்டு இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.