Suresh Gopi Daughter Marriage Jewellery Controversy : வெகு சில தமிழ் படங்களில் தான் நடித்துள்ளார் என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை கொண்ட மலையாள நடிகர் தான் சுரேஷ் கோபி.
பெரிய அளவில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், நடிப்புலகில் களமிறங்கி இன்றைக்கு மிகப்பெரிய ஜாம்பவானாக வளர்ந்துள்ள வெகு சில நடிகர்களில் ஒருவர் தான் சுரேஷ் கோபி. கடந்த 1965 ஆம் ஆண்டு மலையாள மொழியில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதாக கூறப்படுகிறது. ஆனால் 1986 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "பாலகோபாலன் எம்.ஏ" என்கின்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக திரை உலகில் அறிமுகமானார் சுரேஷ்கோபி.
அன்று தொடங்கி இன்று வரை 35 ஆண்டுகளை கடந்து 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இவர் திகழ்ந்து வருகின்றார். தமிழில் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான "நிரபராதி" என்கின்ற திரைப்படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பார்க்க போனால், மலையாள மொழியில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே தமிழ் மொழியில் நடிகராக அறிமுகமானவர் சுரேஷ் கோப்பி.
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான விக்ரமின் 'ஐ' என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அதற்கு முன்னதாக தல அஜித்தின் "தீனா" மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் "சமஸ்தானம்" உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகள் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சுரேஷ் கோபி அவர்களுடைய மகன் பாக்யாவிற்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட பல முக்கிய பிரதமர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவின் திருமணம் முடிந்த அந்த நாளில் இருந்து இணையத்தில் பரவலாக ஒரு விஷயம் பேசப்பட்டு வந்தது.
அதுதான் திருமணத்தின் போது கோபியின் மகள் பாக்யா அணிந்திருந்த நகைகள் குறித்த சர்ச்சை. இந்த நகைகள் அனைத்தும் சுரேஷ கோபிக்கு அரசியல் ரீதியாக அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்றும், இவை எதற்கும் முறையாக வரி கட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி இந்த விஷயங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சுரேஷ் கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில் என் மகளின் திருமணத்தில் அவர் அணிந்திருந்த நகைகள் குறித்து பல தவறான கருத்துக்கள் இணையத்தில் வெளியாவதை நானும் கண்டு வருகின்றேன். அந்த நகைகள் அனைத்தும் முறையாக ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு மற்ற வரிகள் எல்லாம் செலுத்தப்பட்டு என் மகள் பாக்யாவிற்கு அவர்களுடைய பெற்றோர்களாகிய நாங்களும் அவருடைய தாத்தா பாட்டிகளும் கொடுத்த நகைகள் தான். இந்த நகைகள் சிலவற்றை சென்னையிலும், ஹைதராபாத்தில் உள்ள நகை செய்யும் நிபுணர்கள் செய்து கொடுத்தனர். ஆகவே தேவையில்லாமல் என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.