
தமிழ் திரை உலகில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள். தமிழ் திரை உலகில் அவர் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய ஜாம்பவானாக அவர் திகழ்ந்து வருகின்றார். இந்த சூழலில் அவருடைய குடும்பத்தில் ஒரு மிகப்பெரிய சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
சிறு வயது முதலே அவரை வளர்த்தவரும், உலக நாயகன் கமல்ஹாசனின் தாய் மாமாவுமான சீனிவாசன் இன்று கொடைக்கானலில் வசித்து வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 92, பரமக்குடியில் பிறந்த அவர் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். கடந்த சில நாட்கள் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அவருடைய உயிர் பிரிந்தது.
இது குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு பதிவில் "எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும் துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் அவர்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவருடைய பூத உடல் கொடைக்கானலில் இருந்து இன்று இரவு சென்னை கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் வைக்கப்படும் என்றும், நாளை ஏப்ரல் 23ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படும் என்றும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
Pasi Durai : 2 தேசிய விருதுகளை வென்றவர்... இயக்குனர் ‘பசி’ துரை காலமானார் - சோகத்தில் திரையுலகம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.