Actress Sadha : சதாவிடம் உள்ள Hidden Talent.. பலரும் அறிந்திடாத அவரின் மறுபக்கம் - கேட்டால் ஆச்சர்யப்படுவீங்க!

Ansgar R |  
Published : Apr 22, 2024, 02:33 PM IST
Actress Sadha : சதாவிடம் உள்ள Hidden Talent.. பலரும் அறிந்திடாத அவரின் மறுபக்கம் - கேட்டால் ஆச்சர்யப்படுவீங்க!

சுருக்கம்

Actress Sadha : மஹாராஷ்டிராவில் பிறந்து கடந்த 2002ம் ஆண்டு முதல் திரையுலகில் பயணித்து வரும் நடிகை தான் சதா. 2002ம் ஆண்டு வெளியான தெலுங்கில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான "ஜெயம்" என்கின்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை சதா. அதே போல கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜெயம் ரவியின் "ஜெயம்" திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் கால்பதித்தார் சதா. அதன் பிறகு "வர்ணஜாலம்", "அந்நியன்" மற்றும் "பிரியசகி" போன்ற திரைப்படங்கள் நடிகை சகாவிற்கு நல்ல பெரிய வரவேற்பை கொடுத்தது. 

நடிகர் விக்ரம் மற்றும் தல அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நல்ல பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் கடந்த 2010 ஆம் ஆண்டு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காத நடிகை சதா, தற்பொழுது வரை கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 

Thalaivar 171 : ரஜினியுடன் இணையும் ரட்சகன்... தலைவர் 171 படத்தில் மற்றுமொரு மாஸ் நடிகரை களமிறக்கிய லோகி

இருப்பினும் பலரும் அறிந்திடாத ஒரு முகம் சதாவிற்கு இருக்கின்றது, அதுதான் அவர் ஒரு மிகச்சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் என்பது. நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த Wildwife Photographer அவர் என்பது குறிப்பிடத்தக்கது. வனவிலங்குகளை அவை இருக்கும் இடத்திற்கு சென்று சாமர்த்தியமாக அழகிய வகையில் படம்பிடிக்கும் வழக்கத்தை கொண்ட நடிகை தான் அவர்.

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவருடைய புகைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் விளைவு உயர்ந்த கேமரா ஒன்றை அவர் வாங்கியிருந்ததை தனது இன்ஸ்டாகிராமிலும் சதா பதிவிட்டுள்ளது அவர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மார்ச் 2024-ல் பிரபலமான டாப் 10 நடிகர்கள் யார்! அஜித் லிஸ்டுலையே இல்லை... விஜய்க்கு எத்தனாவது இடம் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!