கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜானகி, அப்படத்தின் ரீ-ரிலீஸின் போது தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தரணி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2004-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கில்லி. அந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் அடித்த படமான இது வெறும் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. நடிகர் விஜய்யின் கெரியரில் முதன்முறையாக ரூ.50 கோடி வசூல் அள்ளிய படமும் இதுதான். அப்படி மாஸ் ஹிட் அடித்த கில்லி திரைப்படம் ரிலீஸ் ஆகி தற்போது 20 ஆண்டுகள் ஆகிறது.
அதை கொண்டாடும் விதமாக கில்லி படத்தை உலகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். தமிழகத்திலும் இப்படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. அப்படம் ரிலீஸ் ஆனபோது எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதேபோன்ற வரவேற்பு தற்போது ரீ-ரிலீஸின் போதும் கிடைத்துள்ளது. திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக கில்லி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... “ என் அம்மா நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க.. விராட் அப்பா அவங்கள நல்லா பாத்துக்கணும்..” நவீனா மகள் உருக்கம்..
கில்லி படம் ரீ-ரிலீஸிலும் மகத்தான சாதனை படைத்துள்ளது. அப்படம் ரிலீஸ் ஆன முதல்நாளே ரூ.7 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதுவரை தென்னிந்தியாவில் ரீ-ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய படமாக பவன் கல்யாண் நடித்த குஷி என்கிற தெலுங்கு படம் தான் இருந்தது. தற்போது கில்லி படம் அந்த சாதனையை முறையடித்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால் படக்குழுவும் செம்ம ஹாப்பியாக உள்ளது.
இந்த நிலையில், கில்லி படத்தை இயக்குனர் தரணி மற்றும் அப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜானகி ஆகியோர் தியேட்டரில் கண்டுகளித்துள்ளனர். தியேட்டரில் ரசிகர்கள் ஆர்பரித்து கொண்டாடுவதை பார்த்த ஜானகி, அப்படி போடு பாடலுக்கு அங்கிருந்த ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரிலேயே டான்ஸ் ஆடி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கில்லி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி தியேட்டரில் டான்ஸ் ஆடி அப்படத்தின் ரீ-ரிலீஸை கொண்டாடி உள்ளார். pic.twitter.com/zdZNIMSzSB
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதையும் படியுங்கள்... Varsha : ரம்யா ஸ்டைலில் ஒரு போட்டோஷூட்.. இடையழகில் மயக்கும் தளபதி பட நடிகை - வர்ஷா பொல்லம்மா பிக்ஸ் இதோ!