திரெளபதி படத்தை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆன இயக்குனர் மோகன் ஜி, தடை செய்ய வேண்டிய திண்பண்டம் குறித்து பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதையடுத்து அவர் இயக்கிய திரெளபதி திரைப்படம் அவரை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது. நாடகக் காதலை மையமாக வைத்து அவர் இயக்கிய திரெளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்ததோடு, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவும் மாறியது. கடைசியாக அவர் இயக்கத்தில் செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படம் வெளியானது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மோகன் ஜி, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பல்வேறு பதிவுகளை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஸ்மோக் பிஸ்கட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் விதமாக அவர் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Thalapathy Vijay : தேர்தல் விதிகளை மீறினாரா விஜய்? தளபதி மீதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
அந்த வீடியோவில் ஸ்மோக் பிஸ்கட் ஒன்ற ஆர்வத்துடன் வாங்கி உட்கொள்ளும் சிறுவன் ஒருவன், சில நிமிடங்களிலேயே வலியால் துடிக்கிறான். பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவுடன் முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்து இயக்குனர் மோகன் ஜி போட்டுள்ள பதிவில், இது போன்று விற்கும் ஸ்மோக் பிஸ்ட என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதில் ஊற்றப்படுவது லிக்விட் நைட்ரஜன், ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த வீடியோ எடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் இல்லை என்று சிலர் கமெண்ட் செய்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து மோகன் ஜி போட்டுள்ள பதிவில், சென்னை தீவு திடலில் இந்த வருடம் நடந்த அரசு பொருட்காட்சியில் இரண்டு கடைகள் இதற்காக ஒதுக்கப்பட்டன. பல கடற்கரைகளில் விற்பனை செய்கிறார்கள். திருமண விழாக்களில் தருகிறார்கள். உண்மையே என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இது போன்று விற்கும் என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது .. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும் pic.twitter.com/Nel8I57h5A
— Mohan G Kshatriyan (@mohandreamer)இதையும் படியுங்கள்... Vishal : திருமணம் செய்யச்சொல்லி பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்... ஆனா என்னோட முடிவு இதுதான் - விஷால் ஓபன் டாக்