RaviShankar Suicide : 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' பாடலாசிரியர் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை!

Ansgar R |  
Published : Jul 13, 2024, 11:08 PM ISTUpdated : Jul 14, 2024, 12:13 AM IST
RaviShankar Suicide : 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' பாடலாசிரியர் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை!

சுருக்கம்

Director Ravi Shankar : வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் ரவி சங்கர்.

கடந்த 2002ம் ஆண்டு பிரபல நடிகர் மனோஜ் நடிப்பில் வெளியான "வருஷமெல்லாம் வசந்தம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் ரவி சங்கர். அது மட்டுமல்லாமல் இன்றளவும் சூப்பர் ஹிட் பாடலாக ஒழித்து வரும் சூரிய வம்சம் திரைப்படத்தில் வரும் "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ" பாடலை எழுதியதும் இவர் தான். 

தனிமையில் ரவி சங்கர் 

கடந்த பல ஆண்டுகளாகவே திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்து வந்த ரவிசங்கர், சென்னை கே கே நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அக்கம்பக்கத்தினரிடம் நன்கு பழகும் குணம் கொண்ட ரவி, நேற்று முன்தினம் வியாழக்கிழமை, இறுதியாக அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். 

ரூ.1000 கோடியைத் தாண்டி எகிறிய கல்கியின் வசூல் வேட்டை! தெறிக்கவிடும் பிரபாஸ் - புஜ்ஜி காம்போ!

ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டிலிருந்து ஏதோ துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் உடனடியாக அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது, அங்கே இயக்குனர் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் போலீசார் ஒப்படைத்தனர். அவருடைய மூத்த சகோதரி ராதா மும்பையில் வசித்து வருகிறார் என்றும், அதேபோல அவருடைய அண்ணன் ஹரி தற்பொழுது நியூசிலாந்தில் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், தனிமை அவரை பெரிய அளவில் பாதித்ததாகவும் கூறப்படுகிறது. 

Rashmika Mandanna: விமான நிலையத்தில் ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ரசிகர்கள்; ராஷ்மியின் செயலால் நெகிழ்ந்த ரசிர்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?
தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!