
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண கொண்டாட்டங்கள் பல வாரங்களாகவே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ஆனந்த் – ராதிகாவுக்கு நிச்சயதாரத்தம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் குஜராத்தின் ஜாம் நகரில் முதல் ப்ரீ வேட்டிங் விழா நடந்தது. பல பாலிவுட் பிரபலங்கள் சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழா பேசுபொருளாக மாறியது.
இதை தொடர்ந்து கடந்த மாதம் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் ஆனந்த் – ராதிகாவின் 2-வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதிலும் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக கடந்த வாரம் முதல் இந்த திருமணம் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. சங்கீத், ஹல்தி, மெஹந்தி விழா, சிவ சிவசக்தி பூஜை என பல நிகழ்ச்சிகளை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு செண்டரில் அம்பானி மகனின் திருமண விழா நடைபெற்றது. இதில் இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.
குறிப்பாக இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்வீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பச்சன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதே போல் தமிழ் திரையுலகில் இருந்து சூர்யா ஜோதிகா, விக்னேஷ் ஷிவன் நயன்தாரா, அட்லீ, பிரியா என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அம்பானி மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன், பேரன் ஆகியோருடன் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்டார். அதே போல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் தனது மனைவி ஜெயா பச்சனுடன் இதில் பங்கேற்றார்.
அம்பானி வீட்டு திருமணம் தொடர்பாக பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஷாருக்கானின் வீடியோ ஒன்று ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த், மற்றும் சச்சின் டெண்டுல்கரை கைக்கூப்பி வணங்கினார். மேலும் அங்கிருந்த அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோரின் காலில் விழுந்து வணங்கினார்.
பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் மூத்த நடிகர்களுக்கு மரியாதை அளித்த விதம் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்துள்ளது. ஷாருக்கான் தான் உண்மையான ஜெண்டில்மேன் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.