மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே பாலாஜி இல்லையா? நயன்தாரா ஏன் இப்படி பண்ணாங்க?

Published : Jul 13, 2024, 07:01 PM ISTUpdated : Jul 13, 2024, 07:03 PM IST
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே பாலாஜி இல்லையா? நயன்தாரா ஏன் இப்படி பண்ணாங்க?

சுருக்கம்

மூக்குத்தி அம்மன் 2 தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ரேடியோ நிகழ்ச்சிகளை தொகுத்து பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோவை தொடர்ந்து அவர் சினிமாவில் காமெடியனாக எண்ட்ரி கொடுத்தார். ஆர்.ஜே பாலாஜியின் காமெடிக்கு என தனி ரசிக பட்டாளமே உள்ளனர். நானும் ரௌடி தான், வடகறி, ஜில் ஜங் ஜக், காற்று வெளியிடை, இவன் தந்திரன், ஸ்பைடர், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்தார்.

பின்னர் எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஆர்.ஜே பாலாஜி. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். இதில் மூக்குத்தி அம்மன் படத்தின் இணை இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அடுத்த ஹீரோயின் ரெடி.. அழகில் அம்மாவையே மிஞ்சிய நடிகை மஞ்சு வாரியரின் மகள்.. க்யூட் போட்டோஸ்..

நயன்தாரா அம்மனாக நடித்த இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாக உள்ளதாக ஆர்.ஜே பாலாஜி அறிவித்திருந்தார்.

இந்த படத்தில் நயன்தாரா மறுத்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் த்ரிஷா அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாராவே நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மூக்குத்து அம்மன் 2 தொடர்பான அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

எனினும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆர்.ஜே. பாலாஜி தற்போது த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனால் ஆர்.ஜே பாலாஜி இல்லாமலேயே மூக்குத்தி அம்மன் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பெரிய இயக்குனர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. த்ரிஷாவின் மீதுள்ள காண்டு காரணமாகவே நயன்தாரா இந்த படத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஜவான் படத்திற்கு எந்த படமும் நயன்தாராவுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. மூக்குத்தி அம்மன் 2 அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தங்க சிலை போல மின்னும் நயன்தாரா உடன் ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!