Captain Vijayakanth : மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இப்பொது துவங்கியுள்ளது. வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் மல்க அவருக்கு விடைகொடுத்து வருகின்றனர்.
தனது திரை வாழ்க்கையில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 20க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் அவருடைய திரைப்படங்களில் பாடல்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ, அதற்கு இணையாக சண்டை காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அதேபோல கேப்டன் விஜயகாந்த் அவர்களும் ஒரு மிகச் சிறந்த ஸ்டண்ட் கலைஞராக திகழ்ந்தவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இன்றளவும் விஜயகாந்தினுடைய சண்டைக் காட்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தனக்கென்று தனி பாணியில் சண்டை காட்சிகளில் நடித்து புகழ்பெற்றவர் அவர். இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் "நடிகர் விஜயகாந்த் அவர்களுடைய திரைப்படங்களில் அதிக அளவில் டுப் போட அவர் மறுப்பதற்கான ஒரு காரணத்தை வெளியிட்டுள்ளார். "நாளை உனது நாள்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, தனக்காக டூப் போட்ட ஒரு ஸ்டண்ட் கலைஞர் திரைப்பட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த நிகழ்வு விஜயகாந்தின் மனதை மிகவும் பாதித்த நிலையில் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளாக இருந்தாலும் அதில் டூப் போடாமல் நடிப்பதற்கு ஆயத்தமானார் அவர். பலமுறை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அவரை கட்டாயப்படுத்தியும் கூட, டூப் போடுபவர்களுக்கு என்ன இரண்டு உயிரா இருக்கிறது, அவர்களும் நம்மை போன்றவர்கள் தானே எனக்காக அவர்கள் உயிர் விடுவது எனக்கு சொல்லிவிடுவாராம்.
தன் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவாக வாழ்ந்து தற்பொழுது மறைந்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக கலைஞனை கண்டு வருத்தப்படுவதோடு இல்லாமல், அவர்களுக்கு நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை யோசித்து, அதை செயல்படுத்திய மிகசிறந்த மனிதராக திகழ்கின்றார் கேப்டன் விஜயகாந்த். Rest In Power Captain.