கம்பீரக் குரலோடு பொறிபறக்க டயலாக் பேசிய விஜயகாந்த்... கேப்டனின் கடைசி பட ஷூட்டிங் வீடியோ இதோ

By Ganesh A  |  First Published Dec 29, 2023, 2:49 PM IST

விஜயகாந்த் கடைசியாக நடித்த தமிழன் என்று சொல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


விஜயகாந்த் என்றாலே ஆக்‌ஷன் தான். அவர் படங்களில் அனல்பறக்க கண்கள் சிவக்க வசனம் பேசினாலே அடுத்தடுத்து அதிரடி ஆக்‌ஷன் காட்சி வரப்போகிறது என தெரிந்துவிடும் அந்த அளவுக்கு ரசிகர்களின் மனம்கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் அரசியலுக்குள் நுழைந்த பின்னர் சினிமாவை ஓரம்கட்டிவிட்டார். இருப்பினும் மகனுக்காக அவர் கமிட் ஆன திரைப்படம் தான் தமிழன் என்று சொல்.

இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் என்பவர் இயக்க இருந்தார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க பிரம்மாண்டமாக பூஜையுடன் கடந்த 2015-ம் ஆண்டு தமிழன் என்று சொல் திரைப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. தமிழர்களின் பெருமையை பரைசாற்றும் விதமாக வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக இருந்தது.

Tap to resize

Latest Videos

இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தில் அவருக்கு மன்னர் வேடம் கொடுக்கட்டத்தாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் தொடங்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டது. இதன் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்றுவரை அப்படம் மீண்டும் தொடங்கப்படாமல் அப்படியே கைவிடப்பட்டது.

தமிழன் என்று சொல் படம் தான் கேப்டன் விஜயகாந்தின் கடைசி படமாகவும் அமைந்துள்ளது. அதன்பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியதால் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், தமிழன் என்று சொல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேப்டன் விஜயகாந்த் பொறிபறக்க டயலாக் பேசி நடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட "தமிழன் என்று சொல்" படப்பிடிப்பு தளம் pic.twitter.com/AN3kx3KAtQ

— Karthik Ravivarma (@Karthikravivarm)

இதையும் படியுங்கள்... விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரமுடியல... ஆப்செண்ட் ஆனாலும் அஜித் செய்த நெகிழ்ச்சி செயலால் கண்கலங்கிய பிரேமலதா

click me!