நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியாததால் போனில் அழைத்து பிரேமலதாவிடம் ஆறுதல் கூறி இருக்கிறார் அஜித்குமார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விஜயகாந்தின் மறைவை அடுத்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முழுவதும் அங்கு லட்சக்கணக்கில் குவிந்த ரசிகர்கள் இரவு முழுக்க அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டுசெல்லப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் திரண்டு வந்தனர். நேற்று இரவு விஜய் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று காலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை எனக்கூறி பிரேமலதா மற்றும் சுதீஷிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறி இருக்கிறார் அஜித்.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக துபாய் நாட்டில் உள்ளார். அங்கு படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித்தால் வர முடியாமல் போனது. இதன் காரணமாகவே அவர் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விஜயகாந்துடைய கோபத்துக்கு ரசிகன் நான்... அஞ்சலி செலுத்திய பின் கமல்ஹாசன் உருக்கம்