
பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜா, தன்னுடைய மகன்கள் சினிமா துறையில் தலை தூக்கிய பின்னர் நல்ல நிலையை அடைந்திருந்தாலும், அவருடைய ஆரம்ப காலங்கள் மிகவும் கஷ்டங்கள் நிறைந்தது. அதேபோல் குடும்பத்தில் பல கஷ்டங்கள் இருந்தாலும், தன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களை நன்கு படிக்க வைத்தார். என்பது அனைவரும் அறிந்ததே.
இவருடைய மகன்களான செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் உள்ளார். அதை போல் தனுஷ் முன்னணி நடிகராக மட்டும் இன்றி பன்முக கலைஞராக விளங்கி வருகிறார். கஸ்தூரி ராஜா தன்னுடைய மகள்களையும் நன்கு படிக்க வைத்து, நல்ல இடத்தில திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
தனுஷின் சகோதரிகளில் ஒருவர் கார்த்திகா. மருத்துவராக உள்ள இவர், 12-ஆம் வகுப்பில், சில மதிப்பெண்கள் குறைவாக எடுத்த காரணத்தால்... அரசு மருத்துவக் கல்லூரியில் இவருக்கு இடம் கிடைக்காமல் போனது. இதைத் தொடர்ந்து, மகளை தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க கஸ்தூரிராஜாவிடம் கையில் பணம் இல்லாமல், நிலைகுலைந்து நின்றுள்ளார். அந்த சமயத்தில் தான் விஜயகாந்த் எதேர்சையாக கஸ்தூரிராஜா வீட்டுக்கு வர சொல்லி சந்தித்து பேசி உள்ளார்.
அப்போது கஸ்தூரிராஜா கார்த்திகாவின் படிப்பு குறித்து விஜயகாந்திடம் கூற, விஜயகாந்த் உடனடியாக ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில், கார்த்திகா படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு, அதற்கான செலவையும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவலை விஜயகாந்த் மறைவை ஒட்டி, அவருக்கு இரங்கல் தெரிவித்து கார்த்திகா தேவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "சிலர் மட்டுமே கடவுளுக்கு இணையாக உதவுவார்கள்... எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி!! அப்படிப்பட்ட மனித நேயம் கொண்ட ரத்தினம் நீங்கள். எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. நீங்கள் பல பள்ளி குழந்தைகளின் கல்வி கனவை நிறைவேற்றி வைத்துள்ளீர்கள். அப்படி நீங்கள் உதவி செய்ததில் நானும் ஒருவர். இதை எப்படி உங்களுக்கு நான் திருப்பி செலுத்துவேன். என்னுடைய எம்பிபிஎஸ் கனவு உங்களால் நிறைவேற்றப்பட்டது. உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நான் உங்களின் தீவிர ரசிகை. இப்பொது நாங்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறோம். நீங்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.