தற்போது குட்டை டவுசருடன் இவர் கொடுத்துள்ள க்யூட் போட்டோஸ் வீடியோஸ் வைரலாகி வருகிறது.
தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். வாரிசு நாயகியான இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடியில் சிம்புவுக்கு நாயகியாக தோன்றியிருந்தார். லண்டனில் நடனமாடும் பெண்ணாக வந்து ரசிகர்களை வெகுவாக வசிக்கரித்த வரலட்சுமி. அதன் பிறகு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை கோரிக்கையை அடுத்து அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். அதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு திரை உலகிற்கு போடா போடி மூலம் அறிமுகமான இவர்.பின்னர் கன்னட திரையுலகிலும் என்ட்ரி கொடுத்தார். அங்கு இரண்டு படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் நடித்து முடித்ததை அடுத்து தமிழில் தாரை தப்பட்டைஇல் சூறாவளி என்னும் பெயரில் நடித்திருந்தார். கரகாட்டம் ஆடும் பெண்ணாக வந்து கவர்ச்சி புயலை வீசியிருந்த வரலட்சுமியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
விக்ரம் வேதா, நிபுணன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சத்யா, மிஸ்டர் சந்திர மௌலி, ஈச்சரிக்காய் உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார். கட்டுமஸ்தான உடலையும் உயரத்தையும் கொண்ட வரலட்சுமிக்கு வில்லி கதாபாத்திரம் வெகுவாக பொருந்தும் என்று எண்ணிய லிங்குசாமி இவருக்கு சண்டைக்கோழி 2 -வில் எதிர்மறை நாயகியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். பேச்சி ரோலில் மாஸ் காட்டிய வரலட்சுமிக்கு சர்க்காரிலும் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பிரபல அரசியல்வாதியின் மகள் கோமளவள்ளியாக தோன்றி தனது நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...சூர்யா..கார்த்தியை தொடர்ந்து மாஸ் காட்டும் சிவகுமாரின் மகள் பிருந்தா..குவியும் வாழ்த்துக்கள்
மேலும் செய்திகளுக்கு...பிரம்மாண்ட சம்பளத்துடன்... ஷங்கர் படத்தில் வில்லனாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா- எத்தனை கோடி வாங்கியுள்ளார் தெரியுமா?
மாரி 2 வில் விசாரணை அதிகாரியாகவும் நீயா 2-ல் இச்சாதாரி நாகமாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவருக்கு முன்னணி கதாபாத்திரதிற்கான ரோல்கள் மிக குறைவாகவே கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான இரவில் நிழல் படத்தில் பிரேமகுமாரியாக நடித்திருந்த இவர் போலி சாமியாருடன் இருக்கும் சீடராக வந்து பாராட்டுகளை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பொய்க்கால் குதிரை காட்டேரி உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
தற்போது சமந்தா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான யசோதா படத்தின் மதுபாலாவாக தோன்றியுள்ளார் வரலட்சுமி. பாம்பன், பிறந்தால் பராசக்தி, வண்ணங்கள் உள்ளிட்ட பல படங்களிலும் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 107வது படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி. இதற்கிடையே தனது உடலை மேலும் மெருகேற்ற எண்ணிய இவர் ஒல்லி பெல்லியாக உருமாற்றம் அடைந்துள்ள வீடியோவையும் புகைப்படங்களையும் சமீபத்தில் வெளியிட்டு ஆச்சரியத்தை உருவாக்கி இருந்தார். தற்போது குட்டை டவுசருடன் இவர் கொடுத்துள்ள க்யூட் போட்டோஸ் வீடியோஸ் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கமல், ரஜினியின் ரீல் மகளா இது... இப்படி குண்டாகிட்டாங்களே..! நிவேதா தாமஸ் வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்