உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, பாரதிராஜா நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், அவரை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்க்கே சென்று நலம் விசாரித்துள்ளார்.
81 வயதிலும், மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் திரைப்படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் பழம்பெரும் இயக்குனர் பாரதி ராஜா. இந்நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி, இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த ,மருத்துவர்கள், இயக்குனர் பாரதிராஜாவுக்கு, அஜீரணக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் செய்திகள்: பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை யார்..? என்ன செய்கிறார்... தற்கொலைக்கு என்ன காரணம்?
தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதும், அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் இயக்குனர் பாரதி ராஜா இரண்டே நாட்களில் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களிலேயே அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக, பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும், அரசியல் தலைவருமான ஏசி ஷண்முகம் தெரிவித்தார். மேலும் இவரது உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்டு வந்தார்.
மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... கேரளா புடவை கட்டி அழகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அவரது ரீல் மகள் அனிகா!
சுமார் 10 நாட்களுக்கு மேல், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாரதி ராஜா பின்னர் போது வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியான நிலையில், நேற்று மதியம் 12:30 மணியளவில் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாரதிராஜாவை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள, பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று உடல் நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பாரதிராஜா பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என, பிராத்தனை செய்து கொண்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இப்போது நிம்மதி அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.