சூர்யா..கார்த்தியை தொடர்ந்து மாஸ் காட்டும் சிவகுமாரின் மகள் பிருந்தா..குவியும் வாழ்த்துக்கள்

By Kanmani P  |  First Published Sep 10, 2022, 1:20 PM IST

பிரம்மாஸ்திர படத்தின் நாயகியான ஆலியா பட்டிற்கு தமிழில் பிருந்தா தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.


சிவக்குமார் 70, 80களில் க்யூட் ஹீரோவாக வலம் வந்தவர். முருகன் என்றாலே சிவக்குமார் தான் என பெயர் பெற்ற இவரின் வாரிசுகளான சூர்யா, கார்த்தி இருவருமே இன்று முன்னணி நடிகர்களாக உள்ளனர். தற்போது கார்த்தி பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாக நடித்துள்ளார். இவர் நடிப்பை  திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேபோல உலகநாயகனின் விக்ரம் படத்தில் தோன்றியிருந்த சூர்யா ரோலக்ஸாக வந்து கலக்கி இருந்தார்.  மேலும் பாலாவுடன் வணங்கான், வெற்றிமாறனுடன் வாடிவாசல், சிறுத்தை சிவா உடன் 42 வது படம் என பிசியாக இருக்கிறார். இவர்கள் நடித்த படங்கள் பலவும் பிளாக்பஸ்டர் அடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர்களை வேறு ஒன்றை வேரூன்ற வைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...பிரம்மாண்ட சம்பளத்துடன்... ஷங்கர் படத்தில் வில்லனாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா- எத்தனை கோடி வாங்கியுள்ளார் தெரியுமா?

Tap to resize

Latest Videos

சமீபத்தில் தான் சூர்யா தேசிய விருதையும் வென்றெடுத்தார். இவர் தயாரித்த சூரரைப்போற்று படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அதோடு சூர்யாவின் மனைவி ஜோதிகா பிரபல நடிகையாக உள்ளார். மேலும் தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் , பிரபல படங்கள் பலவற்றையும் தயாரித்து கா பாராட்டுகளை குவித்து வருகிறது இந்த ஜோடிகள்.

இந்நிலையில் சூர்யா கார்த்தியின் சகோதரியான  பிருந்தாவும் தற்போது சினிமா துறையில் மும்மரமாக இறங்கி உள்ளார். பிருந்தா சிவகுமார் சினிமாவுக்கு புதிதானவர் அல்ல. முன்னதாகவே பிரபல பாடகியாக வலம் வருபவர் தான் இவர். இனிமையான குரலால் வசிகரிக்கும் பிருந்தா,  ஜாக்பாட், பொன்மகள் வந்தால், ஓ2 என பல படங்களில் பாடியுள்ளார்.  தற்போது . இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக களம் இறங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்... கமல், ரஜினியின் ரீல் மகளா இது... இப்படி குண்டாகிட்டாங்களே..! நிவேதா தாமஸ் வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

அதன்படி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டி வரும் பிரம்மாஸ்திர படத்தின் நாயகியான ஆலியா பட்டிற்கு தமிழில் பிருந்தா தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆலியாவிற்கு குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக உருவெடுத்துள்ளதை மகிழ்ச்சி போங்க தெரிவித்துள்ளார் பிருந்தா.  

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி பான் இந்தியா படமாக கடந்த ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியான பிரம்மாஸ்திர படத்தில் அமிதாபச்சன், ஷாருக்கான், ரன்வி கபூர், அலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல சர்ச்சைகளில் சிக்கிய பிரம்மாஸ்திரார் தற்பொழுது திரையரங்குகளில் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

click me!