“நாட்டின் நலமே நமது நலம்”... அதிரடி முடிவெடுத்த வைரமுத்து... உடனடியாக எடப்பாடியாருக்கு பறந்த கடிதம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 07, 2020, 06:11 PM IST
“நாட்டின் நலமே நமது நலம்”... அதிரடி முடிவெடுத்த வைரமுத்து...   உடனடியாக எடப்பாடியாருக்கு பறந்த கடிதம்...!

சுருக்கம்

மேலும் இந்த நெருக்கடி நேரத்தில் கொரோனா என்ற கொடிய அரக்கனை எதிர்த்து போராடும் மாநில அரசுக்கு ஆதரவாக பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமூக இடைவெளி என்ற ஒன்றை கடைபிடிப்பதாக தெரியவில்லை. இதனால் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. 

இதையும் படிங்க: தல எப்பவுமே மாஸ் தான்ப்பா... கொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்...!

அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் தங்களது உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த நெருக்கடி நேரத்தில் கொரோனா என்ற கொடிய அரக்கனை எதிர்த்து போராடும் மாநில அரசுக்கு ஆதரவாக பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. ஆம், தனது திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கான தனி வார்டாக பயன்படுத்திக் கொள்ளும் படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மொத்தமாய் அள்ளி கொடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி.... குவியும் பாராட்டுக்கள்...!

அதில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டின் நலமே நமது நலம் என்று பதிவிட்டுள்ளார். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் சிகிச்சைக்கு இடமில்லாமல் அரசு திண்டாடுவதை தவிர்க்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் தங்களது அலுவலகம், வீடு, கல்லூரிஆகியவற்றை அரசுக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!