கொரோனாவால் முடங்கிய திரைத்துறை... தயாரிப்பாளர் சங்கத்திற்கு டாலரில் வாரிக்கொடுத்த நெட்பிளிக்ஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 7, 2020, 5:23 PM IST
Highlights

இப்படி நஷ்டத்தில் தவிக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக இந்திய தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நெட் பிளிக்ஸ் நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை குறைப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பிற துறைகளை காட்டிலும் திரைப்பட துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மொழி திரைப்பட தொழிலாளர்களுக்கும் உதவும் விதமாக அந்தந்த மொழிகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கத்தினர் நிதி திரட்டி வருகின்றனர். 


திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதுப்படங்களை வெளி முடியாமலும், ஏற்கனவே எடுக்கப்பட்ட பட வேலைகளை முடிக்க முடியாமலும் தயாரிப்பாளர்கள் பல கோடி ரூபாயை இழந்து தவித்து வருகின்றனர். இப்படி நஷ்டத்தில் தவிக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக இந்திய தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நெட் பிளிக்ஸ் நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இதையும் படிங்க: மொத்தமாய் அள்ளி கொடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி.... குவியும் பாராட்டுக்கள்...!


இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நெட்பிலிக்ஸ் தங்களது வெற்றியில் இந்தியாவில் இருக்கும் குழுக்கள் மிகவும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதனால் அவர்களுக்கு நெருக்கடியான நிலையில் எங்களால் ஆன உதவுகளை செய்வதை முக்கியமானதாக கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

click me!