
இந்தியாவில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே சென்றாலும், மத்திய, மாநில அரசுகளின் துரித முயற்சி, மற்றும் மருத்துவர்களின், அர்ப்பணிப்பு போன்றவற்றால் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர், கரீம் மொரானியின் மகள்கள் இருவருக்கு ,கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் அவரை தனிமை படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கரீம் மொரானி, நடிகர் ஷாருக்கான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ ’தில்வாலே’ ’ஹாப்பி நியூ இயர்’ ’ரா ஒன்’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளவர்.
இவருடைய மகள், சமீபத்தில் தான் வெளிநாட்டிற்கு சென்று மும்பை திரும்பியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இவருக்கு கொரோனா குறித்து எந்த அறிகுறியும் தென்பட வில்லை. மாறாக இவருடன் இருந்த சகோதரி zoa மொரானிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது.
இதையடுத்து உடனைடியாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் இவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.
இவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, மருத்துவர்கள், குடும்பத்தினர் அனைவருக்குமே டெஸ்ட் எடுத்து பார்த்ததில், ஷாசாவிற்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர்கள் இருவரையும் தனிமை படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும், இவருடன் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 9 போரையும் தனிமை படுத்தி, மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த செய்தி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் கரீம் மொரானியின் ஒரு மகளுக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது இவருடைய இரு மகள்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும் ஷாசாவிக்ரு ஏன், கொரோனா அறிகுறி வெளிப்படவில்லை என மருத்துவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.