
உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை, பாரத பிரதமர் மோடியின் நிதிக்கும், தமிழக முதல்வரின் நிதிக்கும் கொடுத்து வருகிறார்கள்.
அதே போல்... திரையுலக பணிகள் ஒட்டுமொத்தமாக நின்று போனதால், பெப்சி தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவும் விதமாக தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகையர் என பலர் பணமாகவும், பொருட்களாகவும் கொடுத்து உதவி வருகிறார்கள்.
கோலிவுட் திரையுலகம் மட்டும் இன்றி, பாலிவுட் மற்றும் டோலிவுட் என அணைத்து திரையுலகை சேர்ந்தவர்களும் போட்டி போட்டு கொண்டு நிதி உதவிகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: பிரபல தயாரிப்பாளரின் இரண்டு மகள்களுக்கும் உறுதி செய்யப்பட்டது கொரோனா!
ஆனால், கோலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களாக அஜித், விஜய், போன்றோர் இதுவரை.... உதவி செய்வது பற்றி வாய் திறக்காமல் இருந்த நிலையில் தல அஜித் மொத்தமாக, நிதி உதவிகளை தற்போது அறிவித்துள்ளார்.
அதன் படி... பிரதமரின் நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வரின் நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என மொத்தம் 1 .25 கோடி உதவியாக வழங்கியுள்ளார்.
பட விழாக்களில் கலந்து கொள்ளாமல்... பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசாமல் லேட்டாக உதவி செய்தாலும், லேட்டஸ்ட்டாக அஜித் தன்னுடைய பங்கிற்கு உதவியை அல்லி கொடுத்துள்ளார்.
அதே நேரத்தில்... ஆடியோ லாஞ்சில் பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி விட்டு... விஜய் இன்னும் மெளனமாக இருப்பது ஏன் என்கிற கேள்வி, அவருடைய ரசிகர்களுக்கே எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்: ஐயோ பாவம்... மயக்கம் போட்ட சூரி மூஞ்சில் சுடு தண்ணியை ஊற்றிய மகன்! வீடியோ...
ரசிகர்கள் மட்டுமா... அஜித் உதவி செஞ்சிட்டாரு... ஏன் மத்தவங்க இன்னும் வாய் திறக்கவில்லை என பெயரை சொல்லாமல் புகைச்சலை கிளப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். எது எப்படி இருந்தாலும் வரும் நாட்களில் விஜய்யும் உதவிகளை விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.