இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது!

Published : Oct 16, 2021, 01:13 PM IST
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது!

சுருக்கம்

உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi stalin) தற்போது நடித்து வரும் படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) மற்றும் டைட்டில் 'நெஞ்சுக்கு நீதி' (Nenjukku neethi) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் 'நெஞ்சுக்கு நீதி' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படத்தை, தன்னுடைய முதல் படமான 'கனா' படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். எனவே அவரது இரண்டாவது படைப்பாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்: மனைவியை அடித்து கொடுமை படுத்திய பிக்பாஸ் அபிஷேக்..! முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட தீபா..!

 

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் டைட்டில்  “நெஞ்சுக்கு நீதி” என்பதையும் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த படத்தின் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மேலும் செய்திகள்: ஹீரோயினாகும் 'தெய்வமகள்' அண்ணியாரின் மகள்.. ஆரம்பமே இப்படியா? பாத் டப்பில் படுத்து கவர்ச்சி அட்டகாசம்!

 

திபு நினன் தாமஸ், இசையில் உருவாகும் இந்த படத்திற்கு, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது. வெகு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!