பெரிய இடத்துப்பிள்ளைக்கு வந்த சோதனை... ஆர்யன் கானுக்கு ரூ.4500 அனுப்பி வைத்த ஷாருக்கான்..!

Published : Oct 16, 2021, 10:28 AM IST
பெரிய இடத்துப்பிள்ளைக்கு வந்த சோதனை... ஆர்யன் கானுக்கு ரூ.4500 அனுப்பி வைத்த ஷாருக்கான்..!

சுருக்கம்

வெளியில் இருந்து உணவு கொடுக்க அவருக்கு அனுமதி இல்லை. ஜெயிலில் தரமான உணவு வழங்கப்படுகிறது.

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் உள்ள ஆர்யன் கான், சிறைத் துறை அனுமதியுடன் நேற்று 10 நிமிடம் தனது தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரி கானுடன் பேசியுள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த 3-ம்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
 
ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மறுத்து விட்டது. தற்போது அவர் தரப்பில் போதைப்பொருள் தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனு மீதான விசாரணையின்போது, ஜாமீன் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 20-ம்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதற்கிடையே சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு உள்ள ஆர்யன் கானுக்கு அவரது தாய் கவுரிகான் வீட்டில் இருந்து உணவு சமைத்து கொண்டு சென்றார். ஆனால், சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர்.

இந்நிலையில் ஜெயிலில் உள்ள கேண்டீனில் செலவழிப்பதற்காக மகன் ஆர்யன் கானுக்கு அவரது தந்தை ஷாருக்கான் ரூ.4 ஆயிரத்து 500 மணிஆர்டர் அனுப்பி உள்ளார். ஷாருக்கான் சிறையில் இருக்கும் மகனிடம் வீடியோ காலில் உருக்கமாக பேசிய தகவலும் தெரியவந்தது.

’’சிறை கைதிகளுக்கு அதிகபட்சம் ரூ.4 ஆயிரத்து 500 மணி ஆர்டர் அனுப்ப விதிமுறை உள்ளது. அதன் அடிப்படையில் ஆர்யன்கானுக்கு அந்த தொகையை ஷாருக்கான் அனுப்பி உள்ளார். கடந்த திங்கட்கிழமை அவருக்கு அந்த பணம் கிடைத்தது. வெளியில் இருந்து உணவு கொடுக்க அவருக்கு அனுமதி இல்லை. ஜெயிலில் தரமான உணவு வழங்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கைதிகளை குடும்பத்தினா் யாரும் நேரடியாக பார்க்க முடியாது. விசாரணை கைதிகள் வாரத்திற்கு ஒன்று அல்லது 2 முறை குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் ஆர்யன் கான் தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரி கானுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டார். இதேபோல ஆர்யன் கானுக்கு விசாரணை கைதிகளுக்கான அடையாள எண்ணும் வழங்கப்பட்டுள்ளது’’ என ஜெயில் சூப்பிரண்டு நிதின் வேச்சல் கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!