இது முடிவா... ஆரம்பமானு தெரியல.!! நயன்தாராவின் 'மாயா நிழல்' ட்ரைலர் வெளியானது..!

Published : Oct 15, 2021, 06:30 PM ISTUpdated : Oct 15, 2021, 06:33 PM IST
இது முடிவா... ஆரம்பமானு தெரியல.!! நயன்தாராவின் 'மாயா நிழல்' ட்ரைலர் வெளியானது..!

சுருக்கம்

மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா (Nayanthara)  நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'நிழல்' படம் தற்போது 'மாய நிழல்' (Maya Nizhal) என்று தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது.  

மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'நிழல்' படம் தற்போது 'மாய நிழல்' என்று தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'அண்ணாத்த' திரைப்படத்திலும், காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: இதுக்கு ஏன் அந்த ஜாக்கெட்... முழு முதுகையும் அப்படியே காட்டி இருக்கலாம்..! அதுல்யாவின் வேற லெவல் போட்டோஸ்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் டீசர் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு நவெளியான நிலையில், வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாக உள்ளது. மேலும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் போஸ்ட் புரோடக்ஷான் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அநேகமாக இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல், ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: முட்டி மேல் குட்டை ஸ்கர்ட் போட்டு ஸ்கூல் பாப்பாவாக மாறி அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்! அதகள போட்டோஸ்!

 

இந்த நிலையில், நயன்தாரா பிரபல மலையாள நடிகர்  குஞ்சாக்கோ போபன் உடன் இணைந்து நடித்திருந்த, 'நிழல்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நிலையில், இந்த திரைப்படம் தற்போது தமிழில் 'மாய நிழல்' என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்: கோடி கணக்கில் பணம் இருந்தும்... சிறையில் மகனுக்கு 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிய ஷாருகான் குடும்பம்!!

 

இந்த படத்தின் ட்ரைலரை இன்று பிரபல இயக்குனர் வெட்கட் பிரபு வெளியிட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது விறுவிறுப்பான இந்த ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா 6 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்த படத்தை அப்பு என். பட்டாதிரி என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்பட மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழிலும் அதே அளவுக்கு வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை தத்தெடுக்க மறுத்தது ஏன்? முத்துவிடம் மூடிமறைத்த உண்மையை சீதாவிடம் போட்டுடைத்த மீனா - சிறகடிக்க ஆசை
சவுக்கு சங்கர் கைதுக்கு நான் தான் காரணம்..! தானாக முன்வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்