திருடங்கள் இல்லாத ஜாதி இருக்கா? வக்கீலாக மாஸ் காட்டும் சூர்யாவின் 'ஜெய் பீம்' டீசர் வெளியானது..!

By manimegalai aFirst Published Oct 15, 2021, 3:39 PM IST
Highlights

நடிகர் சூர்யா (Suriya) முதல் முறையாக கருப்பு கோட் அணிந்து, வக்கீலாக நடித்துள்ள 'ஜெய் பீம்' (Jai bhim) திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யா முதல் முறையாக கருப்பு கோட் அணிந்து, வக்கீலாக நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யா அறிமுக இயக்குநர் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய் பீம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் வக்கீல் கெட்டப்பில் இருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: முட்டி மேல் குட்டை ஸ்கர்ட் போட்டு ஸ்கூல் பாப்பாவாக மாறி அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்! அதகள போட்டோஸ்!

 

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில்,  ஒரு பழங்குடியினப் பெண்ணுக்குப் போலீசாரால் ஏற்படும் பிரச்சனையும், அதனை வழக்கறிஞர் ஒன்றரை ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி பழங்குடியினப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கு எதிரான சட்டப்போராட்டமும்தான் கதை என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: வசூலில் மாஸ் காட்டிய 'அரண்மனை 3 ' இத்தனை கோடியா? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

 

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். பழங்குடியின பெண்ணாக லிஜோ மோல் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

மேலும் செய்திகள்: ஜீன்ஸ் மட்டும் அணிந்து டாப்லெஸ் போஸ் கொடுத்த பிரபல நடிகை..! மோசமான கவர்ச்சியால் மூட் அவுட் போட்டோஸ்..!

 

பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பத்திற்கு ஆதரவாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள சூர்யா களமிறங்கி ஹை கோர்ட் வரை சென்று அவர்களுக்கு நீதி தேடி தர பல போராட்டங்களை சந்திக்கிறார். சூர்யாவின் துடிப்பான நடிப்பு, விறுவிறுப்பான பின்னணி இசை இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளை மெருகேற்றியுள்ளது. குறிப்பாக "டீசரில், பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த பாதிப்பைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’, ‘திருடங்கள் இல்லாத ஜாதி இருக்கா? உங்க ஜாதியிலயும், என் ஜாதியிலயும் எல்லா ஜாதியிலயும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க’ என சூர்யா பேசும் வசனங்கள் நெஞ்சில் பதிகிறது".

மேலும் செய்திகள்: கோடி கணக்கில் பணம் இருந்தும்... சிறையில் மகனுக்கு 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிய ஷாருகான் குடும்பம்!!

 

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!