நயன்தாரா தயாரிப்பில் பிக்பாஸ் கவின் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது!!

Published : Oct 15, 2021, 12:42 PM IST
நயன்தாரா தயாரிப்பில் பிக்பாஸ் கவின் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது!!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் (Lady SuperStar) என்கிற இடத்தை தக்க வைத்துள்ள பிரபல நடிகை நயன்தாரா (Nayanthara), கவினை (Kavin) வைத்து தயாரிக்க உள்ள படத்தின் டைட்டில் (Titile Announced) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தை தக்க வைத்துள்ள பிரபல நடிகை நயன்தாரா, கவினை வைத்து தயாரிக்க உள்ள படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகைகள் நடிப்பை தாண்டி மற்ற தொழில்களில் கவனம் செலுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நயன்தாராவும் அதனை விடாமல் ஃபாலோ செய்து வருகிறார். அதே நேரத்தில், தரமான கதைகள் அமைந்தால் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து உருவாக்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம்  தயாரித்து, விநியோகம் செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்: வசூலில் மாஸ் காட்டிய 'அரண்மனை 3 ' இத்தனை கோடியா? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

அந்த வகையில் ஏற்கனவே இவர் தயாரித்து, விநியோகம் செய்த 'கூலாங்கல்' உள்ளிட்ட சில படங்கள் விருதுகளை வாங்கி குவித்து வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் பிரபலமான கவினை வைத்து முதல் முறையாக தயாரிக்க உள்ள படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்திற்கு 'ஊர்க்குருவி' என டைட்டில் வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்: தரம் பிரித்து பார்க்குற நேரம் வந்தாச்சு... போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ்..!

 

இந்த டைட்டிலுடன் கூடிய வீடியோ ஒன்றையும் கவின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, தன் மீது நம்பிக்கை வைத்த விக்னேஷ் சிவனுக்கு நன்றி என்றும், அந்த நம்பிக்கையை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி காப்பாற்றுவேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனின் உதவியாளர் அருண் பேட்ரிஷியன் என்பவர் இயக்கவுள்ளார்.

மேலும் செய்திகள்: ஜீன்ஸ் மட்டும் அணிந்து டாப்லெஸ் போஸ் கொடுத்த பிரபல நடிகை..! மோசமான கவர்ச்சியால் மூட் அவுட் போட்டோஸ்..!

 

இப்படம் உண்மை சம்பவம் ஒன்றில் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள எடுக்கப்பட உள்ளது. கவின் நடிப்பில் கடைசியாக ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியான 'லிப்ட்' படத்திற்கு  ஓரளவு வரவேற்பு கிடைத்து நிலையில், தற்போது தன்னுடைய இரண்டாவது படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?