
சிறைச்சாலை அதிகாரிகள் முன்னிலையில் தந்தை ஷாருக்கான் மற்றும் தாயரிடம் ஆர்யன் கான் வீடியோ காலில் உரையாடியுள்ளார்.
சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தற்போது சிறைச்சாலையில் கம்பி எண்ணி வருகிறார். ஆர்யன் கானை ஜாமினில் வெளியே கொண்டுவர அவரது தந்தை எடுத்த அத்தனை முயற்சிகளும் பலன் தரவில்லை. இந்த வழக்கில் உள்துறை அமைச்சக உதவியை நாடியிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளதால் ஆர்யன் கான் ஜாமின் மனுவின் மீதான முடிவையும் 20-ஆம் தேதிக்கு நீதிமண்றம் ஒத்திவைத்துள்ளது.
மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டிர்ந்த ஆர்யன் கான், ஜாமீன் மறுக்கப்பட்ட பின்னர் பொது சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு இரவு முழுவதும் ஆர்யன் கான் தூங்காமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதால் சிறையில் போலீஸார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் சிறைச்சாலையில் இருந்தபடியே தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் வுரி கானுடன், வீடியோ கால் மூலம் ஆர்யன் உரையாடியிருக்கிறார்.
ஆர்தர் சிறையில் இருந்து ஆர்யன் கான் வீடியோ காலில் பேசியதை சிறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். தாய், தந்தையுடன் உரையாடியபோது ஆர்யன் மிகவும் உணர்ச்சிவயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் சிறைச்சாலையில் கைதிகளை நேரில் சந்திக்க தடை உள்ளது. இதனால் அவர்கள் வீடியோ கால் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞரிடம் பேச வாரம் ஒரு முறை அனுமதிக்கப்படுகிறார்கள். அதனடிப்படையிலேயே ஆர்யன் கான், தமது தாய், தந்தையுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்கபப்ட்டதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.