
நடிகர் தனுஷ், நீண்ட இடைவெளிக்கு பின் தன்னுடைய சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பவாதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன், தனுஷ், கூட்டணி என்றாலே பலருக்கும் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும், இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார் என்றால் திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், என்.ஜி.கே வரை செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொட்டதெல்லாம் ஹிட்டு தான். தற்போது அந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
மேலும் செய்திகள்: ஹீரோயினாகும் 'தெய்வமகள்' அண்ணியாரின் மகள்.. ஆரம்பமே இப்படியா? பாத் டப்பில் படுத்து கவர்ச்சி அட்டகாசம்!
கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் 'நானே வருவேன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தயாரிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு 8வது முறையாக யுவன் ஷங்கர் ராஜா செல்வராகவனுடன் இணைகிறார்.
மேலும் செய்திகள்: விவாகரத்தை மறக்க அவசர அவசரமாக சமந்தா எடுத்த அதிரடி முடிவு..! ரசிகர்கள் குஷியோ குஷி..!
இந்த படம் கைவிடாட்டதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியான போது செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் பதிலடி கொடுத்தார். மேலும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் தனுஷ் தன்னுடைய சகோதரர் இயக்கும் 'நானே வருவேன்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ள.
மேலும் செய்திகள்: இதுக்கு ஏன் அந்த ஜாக்கெட்... முழு முதுகையும் அப்படியே காட்டி இருக்கலாம்..! அதுல்யாவின் வேற லெவல் போட்டோஸ்!
ஹாலிவுட் படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்காவில் இருந்து வந்த கையேடு 'மாறன்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பில் பிசியாக இருந்த தனுஷ், அந்த படத்தை முடித்த பின்னர் தற்போது 'நானே வருவேன்' படப்பிடிப்பில் இணைந்துள்ளார். பிற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.