Mamannan First Look: உதயநிதியின் கடைசி திரைப்படம்..! 'மாமன்னன்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

By manimegalai a  |  First Published Apr 29, 2023, 7:52 PM IST

உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது.
 


தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் விநியோகஸ்தர், நடிகர் என அடுத்தடுத்து தன்னுடைய பரிமாணங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம்பிடித்த, உதயநிதி ஸ்டாலின் கடந்த முறை நடந்த, சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அதில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக மாறினார். பின்னர் விளையாட்டு துறை அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக மாறிய பின்னர்... தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால்... திரையுலகில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்தும் விலகியதாக கூறிய உதயநிதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும்... 'மாமன்னன்' திரைப்படம் தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என கூறி இருந்தார். 

Tap to resize

Latest Videos

'பொன்னியின் செல்வன் 2' கடைசி நாள் ஷூட்டிங்கில்... வீடியோ போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி - சோபிதா துளிபாலா!

தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், சவால் நிறைந்த கதைக்களத்தையும் தேர்வு செய்து நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் திடீர் என திரையுலகை விட்டு விலகுவதாக கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. எனினும் மக்கள் பணிக்காக திரையுலகை விட்டு விலகுவதாக உதயநிதி பெரியது, பலரது மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது.

ஹாலிவுட் நடிகை போல் மாற அறுவை சிகிச்சை.. உயிரை விட்ட மாடல் அழகி!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி  நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த போஸ்டர் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகபெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

first look out on May 1st. pic.twitter.com/3l1im3SU3L

— A.R.Rahman (@arrahman)

 

click me!