ஹாலிவுட் நடிகை கிம் கர்தர்ஷியான் போல் மாற பல அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாடல் மாரடைப்பால் மரணம்.
Tamil
கவர்ச்சி நடிகை:
மாடலாகவும், தொழிலதிபராகவும் இருந்து பின்னர் கவர்ச்சி நடிகையாக மாறியவர் கிம் கர்தர்ஷியான்.
Tamil
ஃபிட் தோற்றம்:
இவருடைய மிகப்பெரிய பிளஸ் என்றால்... இயற்கையிலேயே அமைந்த அவரது வளைவு நெளிவுடல் அமைந்த உடலமைப்பு தான்.
Tamil
தீரா ஆசை:
இவரின் உடல் அமைப்பையும், அழகையும் பார்த்து பொறாமை கொள்ளும் பல ஹாலிவுட் நடிகைகள் உள்ளனர்.
Tamil
மாடல் கிறிஸ்டினா:
அந்த வகையில் பிரபல மாடலான கிறிஸ்டினா, மாடல் அழகி கிம் கர்தர்ஷியான் போல் மாற வேண்டும் என சுமார் 10க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.
Tamil
உடல்நலம் பாதிப்பு:
பார்ப்பகம் மற்றும் தன்னுடைய பின்னழகை இயற்கைக்கு மாறாக மிகவும் பெரிதாக காட்ட செய்து கொண்ட அறுவை சிகிச்சையால் நாளுக்கு நாள் இவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
Tamil
சிகிச்சை:
உடல் நல பாதிப்புக்கான சிகிச்சைகளையும் கிறிஸ்டினா எடுத்து வந்துள்ளார். மேலும் சமீப காலமாக மாடலிங் செய்வதையும் கிறிஸ்டினா நிறுத்தியதாக கூறப்படுகிறது.
Tamil
மாரடைப்பு:
இந்நிலையில், 34 வயதே ஆன கிறிஸ்டினா... இந்த பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்பட்ட பக்க விளைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
Tamil
பரபரப்பு:
மாடல் அழகி கிறிஸ்டினாவின் மரணம், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil
கஷ்டம்:
பொருளாதார ரீதியாக கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் அவரது உடலை அடக்கம் செய்ய கூட கஷ்டப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அதற்காக நிதி திரட்டி வருகிறார்கள்.
Tamil
புகார்:
கிறிஸ்டினாவின் மரணத்திற்கு அவருக்கு தவறுதலாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தான் காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.