SS Chakravarthy Passes Away: அஜித் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

By vinoth kumar  |  First Published Apr 29, 2023, 9:25 AM IST

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இவர் தயாரித்த படங்களில் பெரும்பாலானவை அஜித்தின் படங்களாகும். 


நடிகர் அஜித் உடன் இணைந்து பல வெற்றி படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி (58) புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார்.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இவர் தயாரித்த படங்களில் பெரும்பாலானவை அஜித்தின் படங்களாகும். அஜித்தின் ரெட்டை ஜடை வயசு படத்தில் ஆரம்பித்த இவர்களின் கூட்டணி தொடர்ந்து ராசி, வாலி, சிட்டிசன், ரெட், வில்லன், ஜி, வரலாறு, சிம்புவின் காளை உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவர். 

Tap to resize

Latest Videos

கடந்த ஆண்டு விமல் நடித்து வெளிவந்த விலங்கு வெப்சீரிஸில் போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவர் புற்றுநோயால் கடந்த 8 மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை காலமானார். 

இவரின் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

click me!