டிக் டாக் ஜி.பி.முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

Published : Jun 26, 2021, 11:46 AM IST
டிக் டாக் ஜி.பி.முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

சுருக்கம்

'டிக் டாக்' செயலி மூலம் பிரபலமான, ஜி.பி.முத்து மீது கலாச்சாரத்தை சீரழிப்பதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  

'டிக் டாக்' செயலி மூலம் பிரபலமான, ஜி.பி.முத்து மீது கலாச்சாரத்தை சீரழிப்பதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து, டிக்-டாக் மூலம் பிரபலமான இவர், 'டிக் டாக்' செயலி மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவுடன் ரொமான்டிக் பாடல்களை பாடி மிகவும் பிரபலமானவர். ஜி.பி.முத்துவின் டிக்டாக் வீடியோக்களை கலாய்ப்பதற்கு என்று சோசியல் மீடியாவில் பல குரூப் உலவிக்கொண்டிருந்தது. இதனால் கடுப்பான ஜி.பி.முத்துவும் அவர்களை திட்டி... வாயிற்கு வந்த வார்த்தையால் திட்டி பதிவிடும் வீடியோக்களும் வைரலாகி விடும்.

மேலும் செய்திகள்: அமெரிக்காவில் மயோ கிளினிக் முன்பு ரஜினிகாந்த்... வைரலாகும் புகைப்படம்..!
 

டிக்டாக் தடையால் மிகவும் மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கெல்லாம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டார். டிக்டாக் தடை காரணமாக தற்போது முகநூல் பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பழைய மர பொருட்களை பழுது பார்க்கும் வேலை செய்து வரும், இவர் சமீபத்தில் கொரோனா பிரச்சனை காரணமாக தொழில் நஷ்டமடைந்ததாலும், தந்தையுடன் ஏற்பட்ட மன கஷ்டம் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ள முயன்று, தீவிர சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்தார்.

மேலும் செய்திகள்: மாளவிகா மோகனனுக்கும்... பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா? இது தெரியாம போச்சே..
 

தற்போது சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் ஜி.பி.முத்து தலை காட்டி வருவதால் மேலும் பிரபலமாகியுள்ளார். அவ்வப்போது... இவருடைய ரசிகர்கள் பல்வேறு பரிசுகளை இவருக்கு அனுப்ப, அதனை வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார் ஜி.பி.முத்து.

மேலும் செய்திகள்: கிரிக்கெட் வீரரை மணக்க போகும் இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா..! மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..!
 

இந்நிலையில் ஜி.பி.முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இவர் மிகவும் ஆபாசமாக பேசி,  வீடியோக்களை பதிவு செய்து கலாசாரத்தை சீரழிப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எம்.எம்.கே முகைதீன் இப்ராஹிம் என்பவர் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.பி முத்துமீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!