வெற்றிமாறன் கதையில்... வெறித்தனமான ஆக்ஷன் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்..!

Published : Jun 25, 2021, 06:31 PM IST
வெற்றிமாறன் கதையில்... வெறித்தனமான ஆக்ஷன் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்..!

சுருக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ், தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதையில், நடிக்கும் 'அதிகாரம்' படம் குறித்த தகவல் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.  

நடிகர் ராகவா லாரன்ஸ், தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதையில், நடிக்கும் 'அதிகாரம்' படம் குறித்த தகவல் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

மேலும் செய்திகள்: மாளவிகா மோகனனுக்கும்... பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா? இது தெரியாம போச்சே..
 

ஒரு சில கதைகளை, இயக்குனர்கள் எழுதும் போதே... இந்த கதைக்கு இவர்கள் தான் நடிக்க வேண்டும் என்று மைண்டில் பிக்ஸ் செய்துவிடுவார்கள். அந்த வகையில், தற்போது இயக்குனர் வெற்றிமாறனும் 'அதிகாரம்' படத்தின் கதையை எழுதும் போதே... இந்த படத்திற்கு ராகவா லாரன்ஸ் தான் செட் ஆவர் என கூறியதை தொடர்ந்து இவர் நடிப்பில் இப்படம் உருவானது உறுதியாகியுள்ளது.

வெற்றி மாறன் இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதினாலும், இந்த படத்தை அவரது முன்னாள் உதவியாலும், தற்போது வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ அந்தரத்தில் தொங்கியபடி தன்னை தானே கலாய்த்து கொண்ட பிரியா பவானி ஷங்கர்!
 

லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள 'அதிகாரம்' வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனத்துடன் இணைந்து பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் ஜர்னரில் இப்படம் உருவாகிறது என்பது போஸ்டரை பார்த்தாலே தெரிய வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை, மலேசியா, சென்னை, மும்மை, உள்ளிட்ட பல பகுதிகளில் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம்  தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான்- இந்தியா படமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு