கார்த்திக்கு வில்லியாகும் சூர்யா பட ஹீரோயின்..!

By manimegalai aFirst Published Jun 25, 2021, 2:56 PM IST
Highlights

சூர்யாவிற்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஒருவர் தற்போது அவரது சகோதரர் கார்த்திக்கு வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

சூர்யாவிற்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஒருவர் தற்போது அவரது சகோதரர் கார்த்திக்கு வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ அந்தரத்தில் தொங்கியபடி தன்னை தானே கலாய்த்து கொண்ட பிரியா பவானி ஷங்கர்!
 

நடிகர் விஷாலை வைத்து, 'இருபுதிரை', மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கிய... இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள திரைப்படம் 'சர்தார்'. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் வில்லியாக நடிக்க உள்ளவர் குறித்த சூப்பர் தகவல் கசிந்துள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து கார்த்தியின் கை வசம், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மட்டுமே இருந்தது. மேலும் நடிகர் கார்த்தி, இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது .

மேலும் செய்திகள்: ‘கிரிக்கெட் வீரரை மணக்க போகும் இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா..! மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..!
 

இதனை உறுதி செய்யும் விதமாக படக்குழு தற்போது, கார்த்தியின் வித்தியாசமான லூக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் கார்த்தி வயதான தோற்றத்தில் இருந்தார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளனர் என்பது உறுதியானது.

மேலும் செய்திகள்: பாலிவுட் படத்தில் டாப் ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா?
 

இதை தொடர்ந்து, சமீப காலமாக வில்லி கதாபாத்திரத்தை தேர்வு செய்து தன்னுடைய தூள் கிளப்பும் நடிப்பால் மிரட்டிவரும் சிம்ரன் கார்த்திக்கு வில்லியாக இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கார்த்தி வயதான தோற்றத்தில் இந்த படத்தில் உள்ளதால்? இவர்தான் இந்த படத்தின் ஹீரோயினா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எது அப்படி இருந்தாலும் இந்த படம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யாவுக்கு ஜோடியாக 'நேருக்கு நேர்' மற்றும் 'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்களில் நடித்த சிம்ரன் முதல் முறையாக 'சர்தார்' படத்தின் மூலம் அவரது சகோதரர் கார்த்தியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!