சன்னி லியோனை அடுத்து பிரபல நடிகையால் பரபரப்பு... வைரல் போட்டோவால் சோசியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை...!

Published : Jun 25, 2021, 01:15 PM ISTUpdated : Jun 25, 2021, 01:16 PM IST
சன்னி லியோனை அடுத்து பிரபல நடிகையால் பரபரப்பு... வைரல் போட்டோவால் சோசியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை...!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் என கிடைக்கும் பட வாய்ப்புகளையெல்லாம் நோ சொல்லாமல், நடித்து எப்படியும் முன்னணி இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகையான அனுபமா பரமேஸ்வரன், இனி டீச்சர் ஆகலாமுன்னு யோசிச்சிட்டாங்களோ என யோசிக்க வைத்துள்ளது தற்போது நடந்துள்ள தரமான சம்பவம்.  

தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் என கிடைக்கும் பட வாய்ப்புகளையெல்லாம் நோ சொல்லாமல், நடித்து எப்படியும் முன்னணி இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகையான அனுபமா பரமேஸ்வரன், இனி டீச்சர் ஆகலாமுன்னு யோசிச்சிட்டாங்களோ என யோசிக்க வைத்துள்ளது தற்போது நடந்துள்ள தரமான சம்பவம்.

மேலும் செய்திகள்: கிரிக்கெட் வீரரை மணக்க போகும் இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா..! மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..!
 

பீகார், உள்ளிட்ட அணைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் STET (State Teacher Eligibility Test)  என்கிற தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த, ரிஷிகேஷ் குமார் என்பவர் கலந்து கொண்டு தேர்வு எழுதி உள்ளார். இந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றதையடுத்து இணையதளத்தில் சென்று மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது, அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.  மதிப்பெண் பட்டியலில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் படம் இடம்பெற்றிருந்ததே அதற்க்கு காரணம். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தன்னுடைய தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த  தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால், இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்து வருவதால் பீகாரில் பெரும் பரபரப்பு வருகிறது. 

மேலும் செய்திகள்: பாலிவுட் படத்தில் டாப் ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா?
 

ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போல், நடிகை சன்னி லியோன்  ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்று இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இவரது தொடர்ந்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். 'ப்ரேமம்' படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவி இந்த தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் கூட ரசிகர்கள் மனதை தேற்றி கொள்வார்கள், ஆனால் பள்ளி மாணவியாக நடித்த அனுபமா இடம்பெற்றுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருவதையும் சமூக வலைத்தளத்தில் பார்க்கமுடிகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!