அப்பாடா இப்பவாவது தோணுச்சே.... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து வந்த தடாலடி அறிவிப்பு...!

Published : Jun 24, 2021, 07:29 PM IST
அப்பாடா இப்பவாவது தோணுச்சே.... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து வந்த தடாலடி அறிவிப்பு...!

சுருக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள தகவல் பல தயாரிப்பாளர்களுக்கு, இன்ப செய்தியாக அமைந்துள்ளது. பிரச்சனைகள் காரணமாக, டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை செய்யாமல் உள்ள திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் உள்ள படங்களின் பிரச்சனைகளை அறிந்து தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.   

இதுகருது தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் 2015 முதல் 2021 வரை தயாரித்துள்ள திரைப்படங்களில், எந்தவித விற்பனை செய்யாமல் உள்ள திரைப்படங்கள், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை செய்யாமல் உள்ள திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் உள்ள திரைப்படங்கள் ஆகியவற்றின் விபரங்கள், ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு அளித்திருந்தால் அதன் முழு விவரங்களையும் அளிக்க வேண்டும்.

மேலும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்களையும் எந்த லேப்-பில் படம் உள்ளது என்ற முழுவிவரம் சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பின், அந்தப் பிரச்சினை குறித்த முழு விவரங்கள் அனைத்தையும் தங்களது லெட்டர் பேடில் கடிதமாக எழுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு தெரிவிக்கப்படும் திரைப்படங்களுக்கு சங்க நிர்வாகம் மூலம் எந்த விதத்தில் உதவி செய்து தர முடியும் என்பதை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து தர முடிவு எடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பல தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஏமாற்றினாரா ஏ.ஆர்.முருகதாஸ்? ராஷ்மிகாவின் பேட்டியால் வெடித்த சர்ச்சை
Nidhhi Agarwal : சேலையில் இவ்ளோ கிளாமர் தாங்காது! நிதி அகர்வால் வேற லெவல் கவர்ச்சி கிளிக்ஸ்!!