எத்தனை கோடி கொடுத்தாலும் முடியவே... முடியாது..! தன் முடிவில் உறுதியாக இருக்கும் பிரபாஸ்..!

Published : Jun 24, 2021, 06:28 PM IST
எத்தனை கோடி கொடுத்தாலும் முடியவே... முடியாது..! தன் முடிவில் உறுதியாக இருக்கும் பிரபாஸ்..!

சுருக்கம்

இனி எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரப்படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்கிற முடிவில் பிரபாஸ் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

'பாகுபலி' படத்தில் நடித்து முன்னணி கதாநாயகனாக, தென்னிந்திய ரசிகர்கள் அனைவராலும் அறியப்பட்டவர் பிரபாஸ். 'பாகுபலி' திரைப்படம் இவரது புகழை உலக அளவில் கொண்டு சென்றது. எனவே இவருக்கு தற்போது உலக அளவில் ரசிகர்களும் உள்ளதால், தற்போது அதிக இவர் நடிக்கும் படங்களும் பான் இந்தியா படங்களாகவே எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தது படங்களில் நடிக்க பட வாய்ப்புகள் பிரபாஸுக்கு ஒரு பக்கம் குவிந்து வருவது போல்,  அதற்கேற்ற போல் இவரது சம்பளமும் உச்சத்தை தொட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: புற்று நோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்..!
 

தற்போது பிரபாஸ் 'ராதே ஷியாம்', 'சலார்', ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்திலும் ராமராக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை விளம்பர படமொன்றில் அதிக சம்பளத்துக்கு நடிக்க வைக்க ஒரு நிறுவனம் முயற்சித்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை பிரபாஸ் உதறி தள்ளி உள்ளார். 

மேலும் செய்திகள்: 'தேவலோகத்து அழகியோ'... பட்டு புடவையில் பிளீச்சென மின்னும் விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா.! லேட்டஸ்ட் போட்டோஸ்..
 

பிரபல மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் தான் பிரபாஸை அணுகி,ஒரு வருடத்துக்கு தங்கள் நிறுவனத்தின் விளம்பர தூதுரராக இருந்து விளம்பர படங்களில் நடிக்க வேண்டும் என்றும், இதற்காக ரூ. 150 கோடி சம்பளம் தருவதாகவும் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் அதை ஏற்க பிரபாஸ் மறுத்துவிட்டார். முந்தய விளம்பரத்தில் நடிக்க பிரபாஸுக்கு ரூ.18 கோடி மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது தனக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் இனி எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரப்படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்கிற முடிவில் பிரபாஸ் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!