
நடிகை கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றில் இருந்து எப்படி நம்மை காத்துக்கொள்வது என அரசு விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்துள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு விளம்பரத்தில் 'கருப்பன்', உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.
'முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' பற்றி குறும்படம் எடுக்கப்பட்டு அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பப்படுகிறது.
இது பற்றி ’கட்டில்’ திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.
கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறார். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கும் உதவும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் எளிமைப்படுத்தப்பட்டு இன்று பல உயிர்களை காத்து வருகிறது. இத்திட்டம் பற்றிய குறும்படத்தை நான் இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு இயக்கியுள்ளார்.
இந்த விழிப்புணர்வு குறும்படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரனைக் கொண்டு காப்பீட்டுத் திட்டம் குறித்து, எளிய மக்களுக்கும் புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சாயாதேவி, யார்கண்ணன் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். NK.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்ய, செழியன் குமாரசாமி இக்குறும்படத்தை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.