என்ன கொடுமை இது... ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை கரப்பான் பூச்சி..! காண்டான நிவேதா பெத்துராஜ்..!

By manimegalai aFirst Published Jun 24, 2021, 2:40 PM IST
Highlights

நடிகை நிவேதா பெத்து ராஜ் செயலி மூலம் ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

நடிகை நிவேதா பெத்து ராஜ் செயலி மூலம் ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்தார். இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. 

மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... மீண்டும் யோகாவில் அசால்ட் செய்த ரம்யா பாண்டியன்..!
 

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. கடைசியாக தமிழில் வெளியான சங்கத்தமிழன் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் மனம் தளராத நிவேதா பெத்துராஜ், எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவில் தொடர்ந்து போராடி வருகிறார். பட வாய்ப்புகளை கை பற்றுவதற்காக அவ்வப்போது விதவிதமான புகைப்படத்தை தொகுப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்: டீப் நெக் ஓபன் உடன் மெல்லிய மேலாடை... உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் பேண்ட்... உச்ச கவர்ச்சியில் ஆண்ட்ரியா!
 

தற்போது படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிவேதா பெத்து ராஜ், தன்னுடைய சமூக வலைத்தளத்தில், பிரபல உணவு ஆர்டர் செய்யும் நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்த போது, கரப்பான் பூச்சியுடன் சாப்பாடு டெலிவரி செய்யப்பட்டதாக கூறி, அது குறித்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் வைத்துள்ளார். மேலும் பசிக்காக உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 


 

click me!