குக் வித் கோமாளி புகழுக்கு காதலியுடன் திருமணம் ஆகிடுச்சா?

Published : Jun 23, 2021, 08:11 PM IST
குக் வித் கோமாளி புகழுக்கு காதலியுடன் திருமணம் ஆகிடுச்சா?

சுருக்கம்

'குக் வித் கோமாளி' புகழுக்கு திடீர் என ரகசிய திருமணம் நடந்து விட்டதாக தீயாக பரவிய தகவலுக்கு ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதில் கொடுத்துள்ளார்.  

'குக் வித் கோமாளி' புகழுக்கு திடீர் என ரகசிய திருமணம் நடந்து விட்டதாக தீயாக பரவிய தகவலுக்கு ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதில் கொடுத்துள்ளார்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான, புகழுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருவது நாம் அறிந்தது தான்.  இவர் ஏற்கனவே சந்தானம், விஜய், அருண்விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவலும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து பிரபலங்களுக்குமே தற்போது திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கி விட்டது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொள்ள பிரபலங்கள் சிலர் போட்டி போடுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை எடுக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது. கன்னடத்தில் 'குக் வித் கிறுக்கு' என்கிற பெயரின் நிகழ்ச்சி துவங்க பட்டு நடந்து வருகிறது.

தமிழில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, ஷகீலா, ஆகியோர் தற்போது திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்து வரும், புகழ், சிவாங்கி, மணிமேகலை, பாலா, உள்ளிட்டோருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளது.

குறிப்பாக புகழ் ஏற்கனவே சுமார் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அதே போல் இவர் குறித்து எந்த தகவல் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வைரலாகி விடுகிறது. அந்த வகையில் புகழ் தன்னுடைய நீண்ட நாள் காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் தீயாக பரவி வந்த நிலையில், இதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ள புகழ்... செம்ம மாஸான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவில் அஞ்சியும் வாழாதே
கெஞ்சியும் வாழாதே..
உனக்கான
வாழ்க்கையை வாழ்.!! என தெரிவித்துள்ளார். 

.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நந்தினிக்காக சுந்தரவள்ளியை பகைத்துக்கொள்ளும் சூர்யா... சவாலில் வெல்லப்போவது யார்? மூன்று முடிச்சு சீரியல்
ரெக்கார்டு பிரேக்கிங் வசூல்... பாலய்யாவின் அகண்டா 2 படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?