'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எப்போது? வெளியே கசிந்த தகவல்!

By manimegalai aFirst Published Jun 23, 2021, 7:03 PM IST
Highlights

கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்'  படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது என்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.

மேலும் செய்திகள்: டீப் நெக் ஓபன் உடன் மெல்லிய மேலாடை... உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் பேண்ட்... உச்ச கவர்ச்சியில் ஆண்ட்ரியா!
 

கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் முதல் முதலாக விஜய்யை வைத்து 'தளபதி 65 ' ஆவது படத்தை இயக்குகிறார்.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. சுமார் 15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சுமார் 30 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் படக்குழு சென்னை திரும்பியது. எனவே இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் துவங்க செட் அமைக்கப்பட்டு வந்த நிலையில் அந்த பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்:பிக்பாஸ் லாஸ்லியாவா இது? குண்டா கொழுக்கு... மொழுக்கு பேபியா மாறிட்டாங்களே! ஷாக்கிங் போட்டோஸ்..!
 

மேலும் கொரோனா அச்சுறுத்தல் குறைந்த பிறகே படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், கொரோனா தொற்று தமிழகத்தில் குறைத்து கொண்டே வருவதால், தமிழக அரசு படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுத்துள்ளது. எனவே... தற்போது படப்பிடிப்பு குறித்த ப்ரீ புரோடக்ஷான் பணிகள் துவங்கி விட்டதாகவும், ஜூலை மாதத்தில் இருந்து படப்பிடிப்பை சென்னையில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.  


 

click me!