தொடரும் சோகம்... தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரின் தந்தை காலமானார்..!

manimegalai a   | Asianet News
Published : Jun 24, 2021, 10:50 AM ISTUpdated : Jun 24, 2021, 10:51 AM IST
தொடரும் சோகம்... தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரின் தந்தை காலமானார்..!

சுருக்கம்

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் தந்தை சிவன் என்பவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகதோட்டு அறியப்படும் சந்தோஷ் சிவனின் தந்தையும், பழம்பெரும் ஒளிப்பதிவாளருவான சிவன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர் பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் தந்தை சிவன் காலமானதாக வெளியான தகவலை தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்,  சந்தோஷ் சிவன் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இன்று பலராலும் தேசிய விருது ஒளிப்பதிவாளராகவும், திரையுலகின் பன்முகம் கொண்ட நபராகவும் பார்க்கப்பட்டும் சந்தோஷ் சிவனின் ஆரம்ப கால வழிகாட்டியாக இருந்தவர் அவரது தந்தை தான். 86 வயதாகும் இவர், ஒரு ஸ்டில் புகைப்பட கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி பின்னர் சிவன் ஸ்டுடியோ என தன்னுடைய பெயரில் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தினார். வீட்டில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!