வலிமை அப்டேட் கிடைப்பதற்கு முன் அஜித்தின் 61 படம் குறித்து கசிந்த தகவல்..! இது உண்மையா? வியப்பில் ரசிகர்கள்!

Published : Jun 24, 2021, 03:24 PM IST
வலிமை அப்டேட் கிடைப்பதற்கு முன் அஜித்தின் 61 படம் குறித்து கசிந்த தகவல்..! இது உண்மையா? வியப்பில் ரசிகர்கள்!

சுருக்கம்

தல அஜித், 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்திலும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பிலும் இரண்டாவது முறையாக இணைந்து, 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அப்டேட்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள 61 ஆவது படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.  

தல அஜித், 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்திலும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பிலும் இரண்டாவது முறையாக இணைந்து, 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அப்டேட்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள 61 ஆவது படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... மீண்டும் யோகாவில் அசால்ட் செய்த ரம்யா பாண்டியன்..!
 

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்ட தட்ட 95 % சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்து விட்டாலும், இன்னும் ஒரே ஒரு சண்டை காட்சி மட்டுமே வெளிநாட்டில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா அலை முழுமையாக நீங்காததாலும், வெளிநாடுகளுக்கு செல்ல தற்போது கெடுபிடி நிலவிவருவதாலும் அந்த குறிப்பிட்ட சண்டை காட்சியை டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் செட் அமைத்து படமாக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

'வலிமை' படப்பிடிப்பு நிறைவை நெருங்கிக்கொண்டிருப்பதால் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவலும் கசிய துவங்கி விட்டது. அந்த வகையில் ... அஜித்தின் 61 ஆவது படத்தையும், போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும், எச் வினோத் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்: என்ன கொடுமை இது... ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை கரப்பான் பூச்சி..! காண்டான நிவேதா பெத்துராஜ்..!
 

வலிமை படம் போலவே இந்த படமும் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் பல்வேறு லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், முடிந்த வரை 7 மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்றாலும், ஒருவேளை 61 படம் குறித்து வெளியான தகவல் உண்மையானால், 3 ஆவது முறையாக அஜித், எச்.வினோத், போனி கபூர் இணைவது உறுதியாகும். இந்த தகவல் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!