புற்று நோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்..!

Published : Jun 24, 2021, 05:05 PM ISTUpdated : Jun 24, 2021, 05:46 PM IST
புற்று நோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்..!

சுருக்கம்

நடிகர் கமல்ஹாசன் புற்று நோயால் அவதிப்பட்டு வரும் தன்னுடைய ரசிகருடன் ஜூம் காலில் பேசி அவருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.  

நடிகர் கமல்ஹாசன் புற்று நோயால் அவதிப்பட்டு வரும் தன்னுடைய ரசிகருடன் ஜூம் காலில் பேசி அவருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

உலகநாயகன் கமலஹாசனின் தீவிர ரசிகர் சகோத், என்பவர் கனடாவில் வசித்து வருகிறார். இவர் தற்போது மூளை புற்றுநோய் (Stage 3) யால்அவதிப்பட்டு வரும் நிலையில், சகோத்தின் ஆசையை நிறைவேற்ற அவரது கசின் சிஸ்டர், இதுகுறித்து கமலிடம் தெரிவித்து கமலை ஜூம் காலில் 10 நிமிடங்களுக்கும் மேலாக பேச வைத்துள்ளார். கமல் ஹாசன் கண்ணீர் ததும்ப பேசிய வீடியோ காட்சிகள் பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே கரைய வைத்துள்ளது.

கமல் ஜூம் காலில் வந்து பேசுவதை ஆரம்பத்தில் இருந்தே நம்பாத சகோத் பின்னர் உச்சாகத்துடன் அவரை வரவேற்று பேசுகிறார். சகோத்தின் அருகே அவரது இளம் மனைவி, கை குழந்தையுடன் அமர்ந்து கண்ணீருடன் சிரித்து கொண்டே கமலிடம் சில வார்த்தைகள் பேசியுள்ளார். கனடாவாழ் தமிழரான சாகேத் தீவிர மூளை புற்றுநோயால் அவதிப்பட்டு அதோடு போராடி வருவதை கூட சற்றும் கவலை மற்றும் துக்கம் இது குறித்து கமலிடம் தெரிவிக்கிறார் .

மேலும் கமல் ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' படம் பார்த்ததாகவும், 'விருமாண்டி' தன்னுடைய ஃபேவரட் படம் என்றும், தன்னுடைய குழந்தையை கூட செல்லமாக விருமாண்டி என்றே அழைப்பதாக தெரிவித்துள்ளார்.  இந்த முறை போல்ட்டாக தேர்தலை சந்தித்ததற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார் சகோத். மேலும் சென்னை வந்தால் உங்களை பார்க்கமுடியுமா என சகோத் கேட்டதற்கு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து என்னை பார்க்கலாம் என அன்பாக கமல் பதிலதித்தார். அதே நேரத்தில் விரைவில் நீங்கள் குணமடைவீர்கள் என்கிற நம்பிக்கை கொடுத்தார்.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!