நிவேதா பெத்துராஜ் புகாரின் எதிரொலி.. ஓட்டலுக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்!

By manimegalai aFirst Published Jun 24, 2021, 7:09 PM IST
Highlights

நடிகை நிவேதா பெத்து ராஜ் செயலி மூலம் ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி பிரபல ஓட்டல் மீது குற்றம்சாட்டி இருந்த நிலையில், தற்போது அந்த ஓட்டல் நிர்வாகத்தின் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

நடிகை நிவேதா பெத்து ராஜ் செயலி மூலம் ஆர்டர் செய்த உணவில் இரண்டு முறை கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி பிரபல ஓட்டல் மீது குற்றம்சாட்டி இருந்த நிலையில், தற்போது அந்த ஓட்டல் நிர்வாகத்தின் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்தார். இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. 

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. கடைசியாக தமிழில் வெளியான சங்கத்தமிழன் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் மனம் தளராத நிவேதா பெத்துராஜ், எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவில் தொடர்ந்து போராடி வருகிறார். பட வாய்ப்புகளை கை பற்றுவதற்காக அவ்வப்போது விதவிதமான புகைப்படத்தை தொகுப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிவேதா பெத்து ராஜ், செயலி மூலம், பிரபல உணவகம் ஒன்றில் உணவு ஆர்டர் செய்துள்ளார். பிரைடு ரைஸ்சுக்காக கார்த்திருந்தவருக்கு  கரப்பான் பூச்சி ரைஸ் தான் ஆர்டரில் வந்துள்ளது. இது முதல் முறை கூட இல்லையாம், ஏற்கனவே இதே போல் ஒரு முறை நடந்துள்ளதாக கூறி, உணவில் கரப்பான் பூச்சி கிடைக்கும் புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் அவர் வெளியிட அது வைரலாகியது.

இதை தொடர்ந்து நடிகை நிவேதா பெத்து ராஜ் உணவு ஆர்டர் செய்திருந்த மூன் லைட் ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.  மேலும் தற்காலிகமாக அந்த ஓட்டல் செயல்பட தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி, 3 நாட்களுக்கு அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு வேண்டும் என்றும், புகைப்படத்துடன் உரிய ஆதாரத்தை காட்டிய பிறகே ஓட்டல் இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த ஓட்டலில் சுமார் 10 கிலோ பழைய இறைச்சியையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 

click me!