தனுஷின் 43 ஆவது படம் குறித்து வெளியான அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Published : Jun 25, 2021, 07:40 PM IST
தனுஷின் 43 ஆவது படம் குறித்து வெளியான அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

சுருக்கம்

தனுஷ் படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவலை சத்திய ஜோதி பிலிம்ஸ் தெரிவித்து, தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.  

தனுஷ் படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவலை சத்திய ஜோதி பிலிம்ஸ் தெரிவித்து, தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நடிகர் தனுஷ் தன்னுய 43 ஆவது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்வதற்கு முன்பே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்திய வந்த பின்னர் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது வரை இந்த படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், சற்று முன்னர் தனுஷின் 43 ஆவது படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘D43' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்றும் இந்த படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பு ஆக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. 

எனவே இந்த படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. தனுஷ் சென்னை திரும்பியதும் முதல் வேலையாக ‘D43' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்த பின்பே, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள படம், தன்னுடைய சகோதரர் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' ஆகிய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாளவிகா மோகனன் முதல் முறையாக இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அனால் இதுகுறித்த எந்த அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு