ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் புறக்கணிக்க பட்ட தெருக்குரல் அறிவு! குமுறல் பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை!

By manimegalai aFirst Published Aug 1, 2022, 12:51 PM IST
Highlights

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், அவரது மகள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு கூட்டணியில் இண்டிபென்டெண்ட் ஆல்பமாக வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் சமீபத்தில் நடந்த ஒலிபியாட் துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் முன்பு பாடப்பட்ட போது, தெருக்குரல் அறிவு புறக்கணிக்க பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் வெளியான ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல். இந்த பாடலை கடந்த ஆண்டு மார்ச் மாதம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  யூ-ட்யூபில் தளத்தில் வெளியிட, வெளியான சில மணி நேரங்களிலேயே உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்டு  பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியது.

உலக அளவிலும் ட்ரெண்ட் ஆகி பலரை முணுமுணுக்க வைத்த இந்த பாடலை, ஜூலை 28 ஆம் தேதி... துவங்கிய செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பலர் முன்பு, இந்த பாடலை தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் பாடி இருந்தனர். அறிவு பாடிய போஷன் ஆடியோ மூலம் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. எனவே இந்த இந்நிகழ்வில் இப்பாடலை எழுதி இசையமைத்து அதில் பாடியும் இருந்த 'தெருக்குரல்' அறிவு இடம்பெறாதது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

மேலும் செய்திகள்: வாரிசுக்காக விமான நிலையத்தில் வரிசையில் நின்ற தளபதி! அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா?
 

ஏற்கனவே சர்வதேச இசை இதழ்களில் ஒன்றான ரோலிங் ஸ்டோன், இந்திய பதிப்பின், கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'எஞ்சாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் மற்றும் 'நீயே ஒளி' பாடலின் சாதனையை பாராட்டும் விதமாக, பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இதற்க்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்த பின்னர் தெருக்குரல் அறிவின் புகைப்படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: இந்த மனசு தான் சார் கடவுள்... ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் பெண்களிடம் அஜித் காட்டிய பண்பு! வைரலாகும் வீடியோ!
 

இந்த சர்ச்சைக்கு பின்னர் மீண்டும் ஒரு மேடையில் தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனால் மனக்குமுறலோடு இப்பாடல் குறித்த முக்கியமான ஒரு பதிவை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அறிவு.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "என்ஜாய் எஞ்சாமி பாடலை, நானே எழுதி, இசையமைத்து, ,பாடியது மட்டும் இன்றி  நடித்தும் இருந்தேன். இந்த பாடலை உருவாக்குவதற்கு யாரும் எனக்கு ஒரு ட்யூன் போட்டு கொடுத்தோ...; மெலடியோ தயார் செய்து கொடுத்தோ அல்லது ஒரே ஒரு  வார்த்தையையோ கூட கொடுத்து உதவவில்லை. இந்த பாடலுக்காக 6 மாதங்கள் தூக்கத்தை தொலைத்து, மனஅழுத்ததோடு உழைத்திருக்கிறேன்.

மேலும் செய்திகள்: பார்த்தாலே போதையாகுது.. உடலோடு ஒட்டிய டைட் உடையில்... தொடையழகை தாராளமாக காட்டிய மாளவிகா மோகனன்!
 

அதே நேரம் இப்பாடல் உருவாவதற்கு கூட்டு முயற்சியும் இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது எல்லாருக்குமான பாடல் தான், ஆனால் இப்பாடல் வள்ளியம்மாளின் சரித்திரத்தையோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளாக இருந்து கஷ்டப்பட்ட என் முன்னோர்களின் வாழ்க்கையையே, குறிப்பிடவில்லை என்பது அர்த்தமில்லை. நம் மண்ணில் 10,000-த்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசை பாடல்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் நம் முன்னோர்களின் வலி, வாழ்க்கை, வேதனை அன்பு, போன்றவற்றை எடுத்து கூறும் பாடல்களாகவே உள்ளது. நம் பாடல்கள் மூலமாகவே பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறோம் என்றும், அதே போல் நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். ஆனால் நீங்கள் விழித்திருக்கும் போது முடியாது. என்றும் முடிவில் உண்மை எப்போதும் வெல்லும்' என பதிவிட்டுள்ளார்.

புறக்கணிக்கப்பட்ட வலி வேதனைகளோடு அறிவு போட்டுள்ள இந்த பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மட்டும் இன்றி, பலர் அறிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arivu (@therukural)

 

click me!