விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம், வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் குறித்த போஸ்டர் வீடியோ ஒன்றை 7 ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தளபதி யின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அந்த வகையில் இம்முறை, விஜய் - அஜித் ஆகிய இருவரின் படங்களும் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது கூடுதல் சிறப்பு என்றே கூறலாம். இந்த இரு நடிகர்களின் படங்களும், ரிலீஸ் ஆவதால்... பொங்கல் வெளியீடாக வர இருந்த சில திரைப்படங்கள் பின்வாங்கியது.
சமீபத்தில் வாரிசு படத்திற்கு 35 சதவீத திரையரங்குகள் மட்டுமே தமிழகத்தில் ஒதுக்கப்படும் என தயாரிப்பாளர் சர்ச்சைக்கு வித்திடும் வகையில் பேசி உள்ள நிலையில், தற்போது வரை வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு எவ்வளவு திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அதே நேரம் துணிவு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படக்குழு பரபரப்பாக போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
நயன்தாராவின் 'கனெக்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியானது..!
ஆனால் வாரிசு படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம்... சென்னை செம்மரம் பாக்கம் அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் விலங்குகள் நலத்துறையின் உரிய அனுமதி இன்றி 5 யானைகளை வைத்து, படப்பிடிப்பு நடத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மட்டும் இன்றி, 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Varisu Trailer Release Date: 'வாரிசு' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது..? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
படத்திற்கு பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும், படத்தின் ரிலீசுக்கான பணியில் முழு வீச்சில் இறங்கியுள்ளது, வாரிசு படத்தின் தமிழக விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றியுள்ள 7 ஸ்கிரீன் நிறுவனம். மிக பிரமாண்ட போஸ்டர் ஒன்றை, அச்சிட்டு... பேனர் வைக்கும் வரை தத்துரூபமாக வீடியோ வெளியிட்டுள்ளது. இதில் இது வெறும் ஆரம்பம் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களியிலே ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வீடியோ இதோ...
It’s just the beginning 🔥
The Boss Returns 🔥 in theatres near you from Pongal 2023 😊 🔥 pic.twitter.com/tCbVluW3Aq