தளபதி விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள, 'வாரிசு' படத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும், அஜித்தின் 'துணிவு' திரைப்படமும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது. இதை தொடர்ந்து, இருதரப்பு ரசிகர்களும் இந்த இரு படங்களின் வருகைக்கு வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே விஜய்யின் 'வாரிசு' படத்தில் இருந்து, வெளியான ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பிய நிலையில், விரைவில் இரண்டாவது சிங்கள் பாடலும் வெளியாகும் என கூறப்படுகிறது.
அதேபோல் 'துணிவு' படத்திலிருந்தும், சில்லா சில்லா என்கிற பாடலை வெளியிட படக்குழு தயாராகியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இந்த இரு படங்கள் குறித்த அப்டேட்டும் வெளியாகி வரும் நிலையில், தற்போது 'வாரிசு' ஆடியோ லான்ச் மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் வருகிறார்கள். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி டிசம்பர் மாதம், இந்த படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் சில தகவல்கள் கசிந்துள்ளது.
செக் மோசடி புகார்..! சிவாஜி கணேசனின் மகன் - பேரனுக்கு பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்..!
டிசம்பர் 24ஆம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகலாம் என்கிற தகவல் சமூக வலைதளத்தில் கசியவே இதனை வழக்கம் போல் தளபதியின் ரசிகர்கள் வைரலாக்க தொடங்கி உள்ளனர். அதேபோல் 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச்சில், இந்த முறை விஜய் என்ன பேசப் போகிறார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் 'வாரிசு' திரைப்படத்தில், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், சங்கீதா, குஷ்பூ, சம்யுக்தா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை, மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படாத நிலையில், விரைவில் இது குறித்த தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.